'கதாநாயகன் என்பதெல்லாம் வேண்டாம், கதையின் நாயகனாகவே நடிக்க ஆசை'- சூரி

என்னை பொறுத்தவரை இனி கதையின் நாயகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சூரி கூறினார்.

Update: 2024-05-22 15:56 GMT

சென்னை,

நகைச்சுவையில் கலக்கி வந்த சூரி, 'விடுதலை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். தற்போது ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' என்ற படத்தில் மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

பட நிகழ்ச்சியில் சூரி பேசும்போது, "என் வாழ்க்கையை திசைமாற்றியது இயக்குனர் வெற்றிமாறன் தான். என் மீது விழும் அத்தனை பாராட்டுகளும் அவரை மட்டுமே சேரும்.

என்னை பொறுத்தவரை இனி கதையின் நாயகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன். அதுவே நல்லது, உறுதியும் கூட. கதாநாயகன் என்பதெல்லாம் வேண்டாம். அப்படி சென்றுவிட்டால் பாட்டு, பைட்டு என ரூட்டு மாறும். அத்துடன் அனைத்தும் முடிந்துவிடும்.

தனுஷ் கூட, 'என்னை மாதிரி பசங்களை பாக்க பாக்கத்தான் பிடிக்கும்' என்று வசனம் பேசினார். ஆனால் என்னை பொறுத்தவரை, 'என்னையெல்லாம் பாக்க பாக்க பாக்கத்தான் பிடிக்க ஆரம்பிக்கும்'.

என் வளர்ச்சிக்கு சசிகுமார், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றோர் மிகப்பெரிய காரணம். சிவகார்த்திகேயனின் நடனம், விஜய் சேதுபதியின் பாடி லாங்குவேஜ் இரண்டும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். கூடுவிட்டு கூடு பாயும் சக்தி இருந்தால் இருவரது உடல்களிலும் புகுந்து நிறைய தயாரிப்பாளர்களை சந்தித்து படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கி செட்டில் ஆகிவிடுவேன்'' என்று கலகலப்பாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்