நயன்தாராவை சந்தித்த இந்தி நடிகை மலைக்கா

நயன்தாராவை சந்தித்த பாலிவுட் நடிகை மலைகா அரோரா, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;

Update:2022-07-12 14:14 IST

நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த மாதம் 9-ந்தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்ட கையோடு தாய்லாந்து சென்றார். அங்கு தேனிலவு கொண்டாடிய புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். தேனிலவை முடித்து விட்டு இருவரும் மும்பை திரும்பினர். அங்கு ஷாருக்கான் ஜோடியாக ஜவான் இந்தி படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லி இயக்குகிறார். திருமணத்துக்கு முன்பே ஜவான் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்று சில காட்சிகளில் நடித்து கொடுத்தார். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனும் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார். திருமணத்துக்கு பிறகு புதிய படங்களில் கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மும்பையில் நயன்தாராவை பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா சந்தித்து பேசினார். நயன்தாராவை சந்தித்த புகைப்படத்தையும் மலைக்கா வலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மலைக்கா அரோரா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் தைய தையா பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்