முதுமலை காட்டில், 30 நாட்கள்

புதுமுகங்கள் நடித்த ‘பருந்தாகுது ஊர்குருவி" என்ற படத்தின் படப்பிடிப்பு, முதுமலை காட்டில் 30 நாட்கள் நடந்தது.

Update: 2022-10-07 10:02 GMT

அதில் விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, வினோத் சாகர், ஈ.ராமதாஸ், காயத்ரி அய்யர் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர்.

அந்த அனுபவம் பற்றி டைரக்டர் தனபாலன் கோவிந்தராஜ் கூறும்போது, "படப் பிடிப்பு நடந்த இடத்தில்தான் ஒரு சிறுத்தை புலி 4 பேர்களை கடித்தது. எனவே 30 நாட்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் படப்பிடிப்பை நடத்தினோம்" என்றார்.

இந்தப் படத்தை ஈ.ஏ.வி. சுரேஷ், சுந்தரா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்