'குட் பேட் அக்லி' படத்தில் ஸ்ரீ லீலா?- வெளியான தகவல்

'குட் பேட் அக்லி' படத்தில் ஸ்ரீ லீலா நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

Update: 2024-04-22 08:07 GMT

சென்னை,

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'குண்டூர் காரம்'. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஸ்ரீ லீலாவின் நடிப்பு, நடனம் என அனைத்தும் மக்களை கவர்ந்தது. இந்நிலையில், குண்டூர் காரம் படத்தில் நடித்த ஸ்ரீ லீலா அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்தின் 63வது படத்தை 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். மேலும், இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் ஸ்ரீ லீலா நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக தமிழ் படம் ஒன்றில் ஸ்ரீ லீலா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்