'சூர்யா 44' பட டைட்டில் டீசர் விரைவில் வெளியீடு

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள ‘சூர்யா 44’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Update: 2024-05-26 10:55 GMT

சென்னை,

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


சூர்யா 44 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 3 நாள்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்