கதாநாயகனான டைரக்டர்

தமிழ் திரையுலகில் டைரக்டர்கள் பலர் கதாநாயகர்களாகி உள்ளனர். அந்த வரிசையில் டைரக்டர் பி.வி.பிரசாத்தும் இணைந்துள்ளார்.;

Update:2022-12-25 10:20 IST

இவர் நகுல் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. தொடர்ந்து எப்படி மனசுக்குள் வந்தாய் படத்தை இயக்கினார்.

தற்போது 'சகுந்தலாவின் காதலன்' படம் மூலம் பி.வி.பிரசாத் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தை அவரே இயக்கி இசையமைத்தும் இருக்கிறார்.

இதில் முக்தா பானு, கருணாஸ், சுமன், நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதாநாயகன் ஆனது குறித்து பி.வி.பிரசாத் கூறும்போது, ''நான் நடிகனாகும் ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். காதலில் விழுந்தேன் நான் நடிக்க உருவான கதை. ஆனால் நடிக்க முடியவில்லை. எனது ஆசை இப்போது சகுந்தலாவின் காதலன் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.

மூன்று பேரால் கெட்டவனான ஒருவனை சிலர் நல்லவனாக மாற்ற முயற்சிப்பது கதை'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்