முதல் தடவையாக வில்லனாக நடிக்கும் வடிவேலு

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலுவை பயங்கர கொலைகள் செய்யும் குரூர வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

Update: 2022-11-05 02:24 GMT

ராஜ்கிரனின் என் ராஜாவின் மனசிலே படம் மூலம் பிரபலமாகி 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறக்கும் வடிவேலு காமெடி படங்களில் கதாநாயகனாகவும் முத்திரை பதித்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வடிவேலு நகைச்சுவைக்கு ரசிகர்களாக உள்ளனர். வலைத்தளங்களில் வடிவேலுவின் மீம்ஸ்கள் கொட்டி கிடக்கின்றன. சில படங்களில் குணசித்திர நடிகராகவும் வந்தார். பாடகராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். இதுவரை எந்த படத்திலும் வில்லனாக வடிவேலு நடித்தது இல்லை. அவரை வில்லனாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் அனைத்து இயக்குனர்களுக்குமே இருந்தது. இந்தநிலையில் புதிய படத்தில் வடிவேலுவை பயங்கர கொலைகள் செய்யும் குரூர வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் அடுத்து ராம்பாலா டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில்தான் வடிவேலுவிடம் வில்லனாக நடிக்க பேசி வருகிறார்கள். வடிவேலுக்கு கதை பிடித்துள்ளதாகவும் எனவே வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் படக்குழுவினர் நம்புகிறார்கள். வடிவேலுவின் வில்லத்தனம் எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்களும் ஆர்வத்தில் உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்