'காளி' சர்ச்சை போஸ்டர்; பெண் டைரக்டருக்கு குஷ்பு கண்டனம்

நடிகை குஷ்பு டைரக்டர் லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-07-07 09:43 GMT

தமிழ் திரைப்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய மாடத்தி என்ற படம் விருதுகளை பெற்றது. பல ஆவண படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது காளி என்ற ஆவண படத்தை டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் கனடாவில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதில் காளி வேடம் அணிந்த பெண் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு கண்டனங்கள் கிளம்பின. டெல்லியை சேர்ந்த வக்கீல் வினீத் ஜிண்டால் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் சர்ச்சை போஸ்டரை அகற்றும்படி கனடா அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் நடிகை குஷ்புவும் லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், ''படைப்பாற்றலுக்காக உரிமையை தாராளமாக எடுத்துக்கொள்ள கூடாது. படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிறுபான்மையினர் கடவுள்களை இந்த மாதிரி வடிவத்தில் சித்தரிக்க முயல மாட்டார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதில் ஒரு குழப்பம் இருக்கும். இதனை கலை என்று அழைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி ஆகும்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்