படப்பிடிப்பில் மீண்டும் விபத்துக்குள்ளாகி விழுந்த விஷால்- 'லத்தி' ஷூட்டிங் ரத்து

விஷால் நடிக்கும் 'லத்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.

Update: 2022-07-04 04:26 GMT

கோப்புப்படம் 

சென்னை,

விஷால் நடிக்கும் 'லத்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு ஷூட்டிங்கில் ஒரே நபரை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்க, எதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார்.

இதனால், எழுந்து நிற்க முடியாமல் வலியால் அவதிப்பட்ட விஷாலுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், அவருக்கு பிசியோ சிகிச்சை அளிதனர். 

Tags:    

மேலும் செய்திகள்