ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணிக்கு 176 ரன்கள் இலக்கு

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019 #SRHvRCB;

Update:2019-05-04 21:53 IST
பெங்களூரு,

விராட்கோலி தலைமையிலான  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 54-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு  செய்துள்ளது.  இதனையடுத்து  முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில்  7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்துள்ளது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 70 (43) ரன்கள் விளாசினார்.  மேலும் மார்ட்டின் கப்தில் 30 (23) ரன்கள், விஜய் சங்கர் 27 (18) ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு அணியில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் ,  நவ்தீப் சைனி 2 விக்கெட்,  யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கெஜ்ரோலியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து பெங்களூரு அணி 176  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.   

மேலும் செய்திகள்