டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் - ரோகித் சர்மா சாதனை
டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்;
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின்போது ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார் .டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை அவர் கடந்துள்ளார் .
இதனால் டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார் . முதல் இந்திய வீரராக விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .