ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தமிழகத்தில் சென்னையில் நேற்று வார்தா புயல் தாக்கியதின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் ஆரணி சுற்றவட்டார பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. மழையின் அளவு 102.6 மில்லிமீட்டராகும். இதன் க

Update: 2016-12-13 22:45 GMT

ஆரணி,

தமிழகத்தில் சென்னையில் நேற்று வார்தா புயல் தாக்கியதின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் ஆரணி சுற்றவட்டார பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. மழையின் அளவு 102.6 மில்லிமீட்டராகும்.

இதன் காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புரண்டோடியது.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

இருபுறமும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை ஆரணி சுற்றுவட்டார விவசாயிகள் ஆற்றில் வெள்ளம் புரண்டோடுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் மழையின் காரணமாக ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்