சென்னையில் புயல் பாதிப்பு: கோவையிலிருந்து புறப்படும் ரெயில்கள் நேரம் மாற்றம் சில ரெயில்கள் ரத்து

சென்னையில் புயல் பாதிப்பு காரணமாக கோவையிலிருந்து சென்னை செல்லும் சில ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கோவை வழியாக செல்லும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவைக்கு விமானங்களும் தாமதமாக வந்து சென்றன. ரெயில்கள் நேரம் மாற்றம் சென்னையை வார

Update: 2016-12-13 22:15 GMT

கோவை

சென்னையில் புயல் பாதிப்பு காரணமாக கோவையிலிருந்து சென்னை செல்லும் சில ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கோவை வழியாக செல்லும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவைக்கு விமானங்களும் தாமதமாக வந்து சென்றன.

ரெயில்கள் நேரம் மாற்றம்

சென்னையை வார்தா புயல் தாக்கியதை தொடர்ந்து ரெயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோவையிலிருந்து சென்னை செல்லும் சில ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கோவையிலிருந்து சென்னைக்கு நேற்று இரவு 10.40 மணிக்கு புறப்பட வேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அதன்படி அந்த ரெயில் இன்று (புதன்கிழமை) காலை 6.15 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். கோவையிலிருந்து இன்று காலை 6–15 மணிக்கு புறப்பட வேண்டிய இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து நேற்றுக்காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சென்னை செல்ல வேண்டிய இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 2 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது. இதே போல மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக 3.10 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றது.

ரத்து

நேற்று இரவு 8.55–க்கு புறப்பட வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் வழக்கம் போல சென்னைக்கு புறப்பட்டு சென்றது. கன்னியாகுமரியிலிருந்து கோவை வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து கோவை வழியாக சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.50 மணிக்கு வர வேண்டும். ஆனால் அந்த ரெயில் இரவு 11 மணிக்கு தான் கோவை வந்தது. இதே போல ஆலப்புழையிலிருந்து சென்னை செல்லும் ரெயில் நேற்று மாலை 4.05 மணிக்கு கோவைக்கு வர வேண்டும். ஆனால் அந்த ரெயில் இரவு 9 மணிக்கு தான் வந்தது.

மேலும் திருவனந்தபுரம்–சென்னை, மங்களூர்–சென்னை, காரைக்கால்–எர்ணாகுளம் இடையே செல்லும் ரெயில்கள் இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்கள் பற்றிய விவரங்கள் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையம் முன்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சென்டிரல், எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களின் டெலிபோன் எண்களும் கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

விமானங்கள் தாமதம்

கோவையிலிருந்து சென்னை செல்லும் விமானங்கள் மற்றும் சென்னையிலிருந்து கோவை வரும் விமானங்கள் அனைத்தும் நேற்று 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வந்து புறப்பட்டு சென்றன.

மேலும் செய்திகள்