அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உயர்மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவன் உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உயர்மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். போலீசாருக்கு தகவல் அரக்கோணத்திற்கும், மேல்பாக்கத்திற்கும் இடையே உள்ள ரெயில்வே யார்டு பகுதியில் போக்குவரத்திற்கு தகுதியற்ற ந

Update: 2016-12-14 20:30 GMT

அரக்கோணம்,

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உயர்மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

போலீசாருக்கு தகவல்

அரக்கோணத்திற்கும், மேல்பாக்கத்திற்கும் இடையே உள்ள ரெயில்வே யார்டு பகுதியில் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் ரெயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த வழியாக சென்றனர். அப்போது ரெயில் பெட்டி மேலே இருந்து அலறல் சத்தம் கேட்டு உள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெயில் பெட்டி மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது ஆபத்தான நிலையில் ஒருவர் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மாணவர் தற்கொலைக்கு முயற்சி

இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரெயில் நிலையம் அருகே ஆபத்தான நிலையில் இருந்தவர் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம், சக்கொல்லி விழிகோடு வடக்கு பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் என்பவரின் மகன் ராபின் (வயது 17) என்பதும், ராபின் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12–ம் வகுப்பு படித்தும் வந்ததும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பெற்றோர்கள் ராபினை சரியாகபடி என்று கூறியுள்ளனர். இதனால் ராபின், கொல்லத்தில் இருந்து ரெயில் மூலமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள மேல்பாக்கம் யார்டு பகுதியில் பயனற்ற நிலையில் உள்ள ரெயில் பெட்டியில் ஏறி உயர்மின் அழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி ராபின் தூக்கி வீசப்பட்டு ரெயில் பெட்டியின் மேலே விழுந்து உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து கொல்லத்தில் உள்ள மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்