ஜெயலலிதா மறைவையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது

ஜெயலலிதா மறைவையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது

Update: 2016-12-17 22:30 GMT
கரூர்,

ஜெயலலிதா மறைவையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அமைதி ஊர்வலம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று அமைதி ஊர்வலம் நடந்தது. இதற்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ. வுமான வி.செந்தில்பாலாஜி, கீதாமணிவண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர்-கோவை சாலையில் காலை 10 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலைய ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், சர்ச் கார்னர், தபால் நிலையம், ஜவகர் பஜார் வழியாக வந்து பஸ் நிலைய ரவுண்டானாவில் 11.30 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் அங்கு மேடை அமைத்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன்பு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கேற்றி வைத்தார்.

கதறி அழுதனர்

தொடர்ந்து அதன் அருகில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் மற்றொரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., கீதாமணிவண்ணன் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வினர் மலர் தூவும் போது கதறி அழுதனர். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தல், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் 32 ஆண்டு காலம் வாழ்ந்து அவருக்கு அரணாக இருந்த சசிகலா அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

அமைதி ஊர்வலத்தில் மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வக்கீல் வி.சி.கே.பாலகிருஷ்ணன், செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆயில் எஸ்.ரமேஷ், கரூர் ஒன்றிய கழக செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், முன்னாள் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பி.பாலமுருகன், திருக்காம்புலியூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.செல்வமணி உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்