மேற்கு ரெயில்வே ரெயில் நிலையங்களை அசுத்தப்படுத்தினால் இனி ரூ.200 அபராதம் அடுத்த மாதம் முதல் அமலாகிறது

மேற்கு ரெயில்வே ரெயில் நிலையங்களை அசுத்தப்படுத்தும் பயணிகளுக்கு அடுத்த மாதம் முதல் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அசுத்தப்படுத்தும் பயணிகள் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளை தினசரி

Update: 2016-12-18 22:49 GMT

மும்பை

மேற்கு ரெயில்வே ரெயில் நிலையங்களை அசுத்தப்படுத்தும் பயணிகளுக்கு அடுத்த மாதம் முதல் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசுத்தப்படுத்தும் பயணிகள்

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளை தினசரி சுமார் 35 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளில் பலர் ரெயில் நிலையத்திற்குள்ளே எச்சில் உமிழ்தல், குப்பைகளை தொட்டியில் போடாமல் பிளாட்பாரத்தில் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு ரெயில் நிலையத்தை அசுத்தப்படுத்தும் பயணிகள் கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து தற்போது ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அபராத தொகை அதிகரிப்பு

கடந்த 6 மாதத்தில் மட்டும் ரெயில் நிலையங்களை அசுத்தப்படுத்தியாக 19 ஆயிரம் பேரை பிடித்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர். தற்போது அபராதமாக வசூலிக்கப்படும் ரூ.100–ஐ இரண்டு மடங்காக மேற்கு ரெயில்வே அதிகரித்து உள்ளது. அதாவது இனி ரெயில் நிலையங்களை அசுத்தப்படுத்தி பிடிபடும் பயணிகள் அபராதமாக ரூ.200 கொடுக்க வேண்டியிருக்கும்.

இது குறித்து மேற்கு ரெயில்வே மும்பை கோட்ட மேலாளர் முகுல் ஜெயின் கூறுகையில், ‘‘அதிகரிக்கப்பட்ட அபராத தொகை அடுத்த மாதம்(ஜனவரி) முதல் அமலுக்கு வரும். ரெயில் நிலையங்களை சுத்தமாக பேணுவதில் அக்கறை காட்டி வருகிறோம். இதற்காக ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் 800 குப்பை தொட்டிகள் விரைவில் வைக்கப்பட உள்ளன’’ என்றார்.

மேலும் செய்திகள்