உடல்உறுப்பு தானம் அவசியத்தை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பிரசார ஊர்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரோட்டரி மாநில துணை ஆளுனர் சுப்பிரமணி தலைமையில் ஏராளமானோர் உடல்உறுப்பு தானம் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மோட்டார்சைக்கிளில் பிரசார ஊர்வலமாக நேற்று ராமநாதபுரம் வந்தனர். இவர்கள் ராமநாதபுரம், ராமேசு

Update: 2016-12-19 22:30 GMT

ராமநாதபுரம்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரோட்டரி மாநில துணை ஆளுனர் சுப்பிரமணி தலைமையில் ஏராளமானோர் உடல்உறுப்பு தானம் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மோட்டார்சைக்கிளில் பிரசார ஊர்வலமாக நேற்று ராமநாதபுரம் வந்தனர். இவர்கள் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, தூத்துக்குடி, நெல்லை வழியாக மீண்டும் கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஊர்வலத்துக்கு ராமநாதபுரத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ரோட்டரி பட்டயத்தலைவர் ரவிச்சந்திரராமவன்னி தலைமையில் வர்த்தக சங்கதலைவர் ஜெகதீசன், ரோட்டரி நகர் தலைவர் மகாராஜன், ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜேஸ்வரன், முன்னாள் துணை ஆளுனர் வக்கீல் சோமசுந்தரம், கோல்டன் ரோட்டரி பட்டயதலைவர் ஆத்மாகார்த்திக் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் ஊர்வலத்தை வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க, வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த குழுவினருக்கு சி.கே.மங்கலத்தில் ராமநாதபுரம் ரோட்டரி மாவட்ட தேர்வு துணை ஆளுனர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி சங்க தலைவர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேவகோட்டை ரோட்டரி சங்க தலைவர் போஸ், நிர்வாகிகள் அமலன் அசோக், அன்பு, டாக்டர்கள் ராஜா முகமது, செந்தில் நாயகம், சுகந்தி போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலத்துக்கு வந்த இந்த பிரசார குழுவினர் ஜும்மா பள்ளிவாசல் தெரு, இஸ்மாயில் பஜார், பரம்பை ரோடு, காந்திநகர், பஸ் நிலையம் வழியாக பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தனர். அங்கு உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற ஊர்வலத்தை ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஜமாத் தலைவர் பசீர் அகமது ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட ரோட்டரி சங்க துணை ஆளுனர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், கோல்டன் ரோட்டரி சங்க தலைவர் கந்தசாமி, சங்க பொருளாளர் ஜான் பிரிட்டோ, முன்னாள் பேரூராட்சி தலைவர் அம்பா சாகுல்ஹமீது, மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் ஷாஜகான் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்