தர்மபுரியில் குறை தீர்க்கும் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்

தர்மபுரியில் குறை தீர்க்கும் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்

Update: 2016-12-20 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாப்பாத்தி, தனி துணை கலெக்டர் (கலால்) மல்லிகா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலாஹிஜான், முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். இதில் குடிநீர், மின் வசதி, வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பஸ் வசதி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.

நலத்திட்ட உதவிகள்

இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடி தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தினார். கூட்டத்தில் 3 பேருக்கு விபத்து நிவாரண தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு ஊன்றுகோல், சக்கர நாற்காலி ஒருவருக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விவேகானந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும் செய்திகள்