பயிர் கருகியதால் மனமுடைந்தார் மாரடைப்பால் விவசாயி சாவு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே குன்னலூர் தர்காத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது65). இவர் அதே பகுதியில் 1½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா சாகுபடி செய்திருந்தார். தற்போது மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவு தண்ணீர் வராததாலும், பருவ மழை

Update: 2017-01-04 22:45 GMT

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே குன்னலூர் தர்காத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது65). இவர் அதே பகுதியில் 1½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா சாகுபடி செய்திருந்தார். தற்போது மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவு தண்ணீர் வராததாலும், பருவ மழை பொய்த்ததாலும் அவரது வயலில் பயிர்கள் கருகியது. இதனால் அவர் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வயலுக்கு சென்று கருகிய பயிர்களை பார்த்து விட்டு சோகத்துடன் சவுந்தரராஜன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பயிர்கள் கருகி உள்ளது குறித்து கவலையுடன் குடும்பத்தினரிடம் கூறி விட்டு தூங்க சென்று விட்டார். இதை தொடர்ந்து நேற்று காலையில் குடும்பத்தினர் பார்த்த போது சவுந்தரராஜன் இறந்து கிடந்துள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த எடையூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி விட்டு சென்றனர். இறந்த சவுந்தரராஜனுக்கு கோடியம்மாள் என்ற மனைவியும், கோகிலாம்மாள் என்ற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்