அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதை கண்டித்து நடந்தது

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதை கண்டித்து நடந்தது

Update: 2017-01-04 23:00 GMT
நாகர்கோவில்,

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த டிசம்பர் மாத ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதை கண்டித்தும், அதனை உடனே வழங்கக்கோரியும், இதர நிலுவைகளையும் உடனே வழங்க வேண்டும் எனக்கோரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் குட்டப்பன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரைமண்ட் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட ஓய்வூதியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஐவின், பொன்சோபன்ராஜ், ஸ்டீபன் ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சங்க துணைத்தலைவர் பால்ராஜ் நிறைவுரையாற்றினார். சங்க பொருளாளர் செல்வராஜாசிங் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்