ஜெயலலிதா மறைந்து 30-வது நாளையொட்டி அரியலூரில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

ஜெயலலிதா மறைந்து 30-வது நாளையொட்டி அரியலூரில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

Update: 2017-01-05 22:45 GMT
அரியலூர்,

ஜெயலலிதா மறைந்து 30-வது நாளையொட்டி அரியலூரில் நேற்று அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் சென்றனர்.

மவுன ஊர்வலம்

ஜெயலலிதா மறைந்து 30-வது நாளையொட்டி அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரியலூரில் நேற்று மவுன ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட அனைத்து அணி பொறுப்பாளர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் அரியலூர் காமராஜர் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் பஸ்நிலையத்தை வந்தடைந்தனர்.

உறுதிமொழி

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, அ.தி.மு.க.வின் கண்ணியத்தை காப்பாற்றிடவும், இன பேதங்களுக்கு இடம்கொடுக்காமல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் கழக பணிகளை ஆற்றிடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த ஊர்வலத்தில் நிர்வாகிகள் சிலர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. துரைமணிவேல், மாவட்ட மீனவரணி செயலாளர் நாகராஜ், மகளிரணி செயலாளர் ஜீவா, மாவட்ட கழக துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் அறிவு என்ற சிவசுப்பிரமணியன், ஆண்டிமடம் ஒன்றிய கழக செயலாளர் சிலம்பூர் மருதமுத்து உள்பட ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்