வங்கியில் 111 அதிகாரி பணியிடங்கள்

பிரபல வங்கியில், அதிகாரி தரத்திலான பணியிடங்களுக்கு 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2017-01-30 08:17 GMT
இது பற்றிய விவரம் வருமாறு:

இந்திய தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலாளர், உதவி பொதுமேலாளர், துணை பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இதில் உள்ளன. துணை பொது மேலாளர் பணிக்கு 13 இடங்களும், உதவி பொது மேலாளர் பணிக்கு 17 இடங்களும், மேலாளர் பணிக்கு 81 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-

வயது வரம்பு:

24 முதல் 32 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் மேலாளர் பணிக்கும், 20 முதல் 36 வயதுடையவர்கள் உதவி பொதுமேலாளர் பணிக்கும், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் துணைப் பொது மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

பி.எஸ்சி. அக்ரி, வெட்னரி சயின்ஸ் மற்றும் இதர பட்டப்படிப்புகள், வேளாண் பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கும், எம்.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்சி. படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் துணைப் பொது மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.150-ம் மற்றவர்கள் ரூ.700-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 1-2-2017 முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். 20-2-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.idbi.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்