கரூரில் இருந்து நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 2 ஒட்டகங்கள்

கரூர் மாவட்டத்தில் உள்ள நத்தமேட்டை சேர்ந்தவர் கார்த்தி (வயது 27).

Update: 2017-02-03 22:30 GMT

நாமக்கல்,

கரூர் மாவட்டத்தில் உள்ள நத்தமேட்டை சேர்ந்தவர் கார்த்தி (வயது 27). இவர் சர்க்கசில் சாகசம் செய்வதற்காக தனது 2½ வயது கொண்ட பெண் ஒட்டகம் ஒன்றையும், 6 மாத குட்டியான மற்றொரு பெண் ஒட்டகத்தையும் அனுப்பி வருவார். இந்த நிலையில் சில தினங்களாக பெண் ஒட்டகம் சாப்பிடாமல் இருந்து வந்தது. அத்துடன் அது வெளியேற்றும் கழிவுகளில் மாறுதல் இருந்தது தெரியவந்தது. மேலும் 6 மாத ஒட்டகத்திற்கு தோலில் மாற்றம் தெரிந்ததால் அதையும், பெரிய ஒட்டகத்தையும் நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.

அங்கு பெரிய ஒட்டகத்தை பரிசோதித்த டாக்டர்கள் அது சாப்பிடும்போது அஜீரணம் செய்யமுடியாத ஏதோ ஒரு பொருளை சாப்பிட்டதால் அந்த ஒட்டகம் முழுமையாக சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அந்த ஒட்டகத்திற்கு குளுக்கோஸ் மற்றும் ஊசி போட்டு உள்ளனர். அந்த ஒட்டகம் வெளியேற்றும் கழிவுகள் மூலமாக வயிற்றில் இருந்த அஜீரணம் ஆகாமல் இருந்த பொருள் வெளியே வரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். 6 மாத குட்டி ஒட்டகத்திற்கு வயிற்றில் பூச்சி இருப்பதாகவும், அதை ஊசி போட்டு சரிசெய்து விடுவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்