அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு

திருப்பூரில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க.வினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2017-02-03 22:30 GMT
அண்ணா நினைவுநாள்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 48-வது நினைவு நாள் நேற்று திருப்பூரில் அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், நடராஜன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதுபோல் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அங்கு உள்ள அண்ணாசிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தொ.மு.ச. மாநில துணைத்தலைவர் சி.கோவிந்தசாமி, துணைச்செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், மாநகர தி.மு.க. பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.வினர் அஞ்சலி

திருப்பூர் மாநகர ம.தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் சு.சிவபாலன் தலைமையில், நகர செயலாளர் நாகராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ரெயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட, நகர ஒன்றிய மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணியை சேர்ந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் புதிய நீதிக்கட்சி சார்பில் நல்லூர் விஜயாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அண்ணாவின் உருவப்படத்துக்கு கட்சியின் பொங்கலூர் தொகுதி அமைப்பாளர் பழனிசாமி தலைமையில், மகளிர் அணி செயலாளர் இந்திராணி முன்னிலையில் அந்த கட்சி நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பல்லடம்

பல்லடத்தில் அண்ணா நினைவுநாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., நகர நிர்வாகிகள் சரளை கு.பி.ரத்தினசாமி, வைஸ்.பி.கே. பழனிசாமி, தருமராஜன், தங்கவேல், கயாஸ் அகமத், சித்ராதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல் ஜெ.தீபா பேரவை சார்பில் பல்லடம் தினசரி மார்க்கெட் அருகே அண்ணாவின் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் பாலமுருகன், நாகராஜ், மனோகரன், பத்மநாபன், ரங்கசாமி வடிவேல், மணி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அண்ணா நினைவுநாளையொட்டி தி.மு.க. சார்பில் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாவின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மலர்தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி, பி.ஏ.சேகர், பரமசிவம், சின்னசாமி, சுப்பிரமணியன், லோகநாதன், சம்பத், சண்முகம், காந்திமதி, குட்டி பழனிசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்