பிச்சை எடுக்கும் பெண் சென்ற 2½ வயது சிறுமி மீட்பு விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பிச்சை எடுக்கும் பெண் கடத்தி சென்ற 2½ சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டால் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Update: 2017-02-18 22:18 GMT

மும்பை,

பிச்சை எடுக்கும் பெண் கடத்தி சென்ற 2½ சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டால் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிறுமி மாயம்

மும்பை, பாந்திரா பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 2½ வயது சிறுமி சைபா சாயிக். கடந்த 9–ந் தேதி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சைபா சாயிக் திடீரென மாயமானால். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதில் சம்பவத்தன்று நடத்தர வயதுடைய பெண் ஒருவர் அச்சிறுமியை தாதர் ரெயில் நிலையத்தில் இருந்து கிங் சர்கிளுக்கு ரெயிலில் கடத்தி சென்றது கண்காணிப்பு கேமரா உதவியால் போலீசாருக்கு தெரியவந்தது.

குழந்தை மீட்பு

இதையடுத்து சிங் சர்கிள் பகுதியில் போலீசார் வீடு, வீடாக சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த தம்பதியிடம் இருந்து போலீசார் சிறுமியை மீட்டனர். இதையடுத்து தம்பதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தம்பதி கூறிய தகவல்கள் வருமாறு:–

பெண் ஒருவர் சிறுமியுடன் இப்பகுதியில் பிச்சை எடுத்து வந்தார். அவர் எங்களிடம் அச்சிறுமி தனது பேத்தி என்றும், சிறுமியின் தந்தை சமீபத்தில் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

எங்களுக்கு குழந்தை இல்லாததால் சிறுமியை எங்களுக்கு தத்துக்கொடுக்குமாறு அவரிடம் கூறினோம். இதை ஏற்றுக்கொண்ட அவர் தனக்கு ரூ. 10 ஆயிரம் கொடுத்தால் சிறுமியை தருவதாக தெரிவித்தார். எனவே நாங்கள் குழந்தையின் தாயை அழைத்துவந்தால் அவர் கேட்டதை விட அதிகமாக பணம் தருவதாக தெரிவித்தோம். இதையடுத்து அந்த பெண் குழந்தையை எங்களிடம் கொடுத்துவிட்டு தாயை அழைத்து வருவதாக கூறி சென்றார். ஆனால் இதுவரை வரவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்