உணவு பொருட்களை பாதுகாக்க சிறு வியாபாரிகளுக்கு இலவச கண்ணாடி பெட்டி

உணவு பொருட்களை பாதுகாக்க சிறு வியாபாரிகளுக்கு இலவச கண்ணாடி பெட்டிகள் உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2017-03-08 20:30 GMT
திருவேங்கடம்,

உணவு பொருட்களை பாதுகாக்க சிறு வியாபாரிகளுக்கு இலவச கண்ணாடி பெட்டிகள் உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாம்


கரிவலம்வந்தநல்லூரில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அலுவலர்கள் முத்துக்குமாரசாமி, ரமேஷ், சந்திரசேகரன், கருப்பசாமி ஆகியோர் உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளை உணவு பாதுகாப்பு வியாபாரிகள் பின்பற்றுவது பற்றி எடுத்துக் கூறினார்கள்.

கரிவலம்வந்தநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜகோபால் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பற்றி பேசினார். இதில் வியாபாரிகள் சங்க தலைவர் திருமலை குமாரசாமி, செயலாளர் திருப்பதி உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் உணவு பொருட்களை பாதுகாக்க சங்கரன்கோவில் வட்டார பகுதிகளில் சிறுவியாபாரிகள் 30 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு கண்ணாடி பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் தொழில் அதிபர்கள் பூவையா, முருகன் ஆகியோருக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

தகுதிகள்

சிறு வியாபாரிகள் இலவச கண்ணாடி பெட்டியை பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:–

உணவு பாதுகாப்பு துறையில் பதிவு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். சுமார் 10 லிட்டர் பாலுக்குள் டீ, காபி விற்பனை செய்ய வேண்டும். டீ மாஸ்டர் தனியாக நியமித்து இருக்க கூடாது. கலப்படமற்ற தரமான டீத்தூள் உபயோகிக்க வேண்டும். வாகனங்கள் செல்லும் மெயின் ரோட்டில் கடை வைத்திருக்க வேண்டும்.

இந்த தகவலை சங்கரன்கோவில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்