கல்லலில் மதுபானக்கடையை மாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையை

Update: 2017-03-30 22:45 GMT

கல்லல்,

சிவகங்கை மாவட்டம் கல்லல் பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி அந்த கடையை இந்திராநகர்–அரண்மனை சிறுவயல் செல்லும் சாலையில் மாற்ற முயன்றனர். இதையடுத்து இந்த பகுதியில் குடியிருப்பு வீடுகள் அதிகமாக இருப்பதால் இப்பகுதி மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கல்லல் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கல்லல் வருவாய்த்துறை அலுவலகத்தில் காரைக்குடி தாசில்தார் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் குணாளன், மாவட்ட துணைச் செயலாளர் சாத்தையா மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் இந்த இடமாற்றம் குறித்து மதுபானகடை மேல் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்