இரவு பணியில் தூங்கிய போக்குவரத்து ஊழியர்கள் 9 பேர் இடைநீக்கம் துக்காராம் முண்டே அதிரடி நடவடிக்கை

இரவு பணியில் தூங்கிய போக்குவரத்து ஊழியர்கள் 9 பேரை இடைநீக்கம் செய்து துக்காராம் முண்டே அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

Update: 2017-04-02 22:33 GMT
புனே,

இரவு பணியில் தூங்கிய போக்குவரத்து ஊழியர்கள் 9 பேரை இடைநீக்கம் செய்து துக்காராம் முண்டே அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

துக்காராம் முண்டே

நவிமும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டே. நவிமும்பையில் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து அரசியல்வாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார்.

இந்த நிலையில் அவர் திடீரென அந்த பதவியில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு, புனே போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு பணியில் சேர்ந்த நாள் முதல் அதிரடி நடவடிக்கையாக போக்குவரத்து கழக ஊழியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதில், பணிக்கு தாமதமாக வந்ததாக 117 ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து உத்தரவிட்டார்.

பணி இடைநீக்கம்


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு புனே கோத்ரூட் மற்றும் புனே ரெயில் நிலையம் அருகே பஸ் நிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பணியில் இருந்த 2 பஸ் டிரைவர்கள் உள்பட 9 போக்குவரத்து ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்ததை கண்டார்.

இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, 9 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்