அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-29 20:45 GMT
அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்கள் போராட்டம்

அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்புக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று அடுக்கம்பாறை மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் என 200–க்கும் மேற்பட்டோர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நோயாளிகள் அவதி

பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் மனித சங்கிலி போராட்டம் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க வேலூர் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்களின் தொடர் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல் வேலூர் அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள் பணியை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்