களம்பூர் அருகே சட்டத்துக்கு விரோதமாக மதுபானம் விற்ற 3 பேர் கைது

களம்பூர் அருகே சட்டத்துக்கு விரோதமாக மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2017-04-29 20:30 GMT
ஆரணி,

களம்பூர் அருகே சட்டத்துக்கு விரோதமாக மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–

சட்டத்துக்கு விரோதமாக..


தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால், ஆங்காங்கே இருக்கின்ற ஒருசில மதுக்கடைகளுக்கு சென்று மதுப்பிரியர்கள் மதுபானங்கள் வாங்கி குடித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆரணி பகுதியில் சிலர் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வந்து சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்து வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரீனாபேகத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. ஜெரீனாபேகம் தலைமையில் களம்பூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அல்லிராணி, பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் களம்பூர், வடமாதிமங்கலம், கருங்காலிகுப்பம், திருமலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.

3 பேர் கைது

அப்போது மேற்கண்ட பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாக களம்பூரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 55), கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (50), சாமிநாதன் (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 170 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்