சொத்து தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல், 2 பேர் கைது
சொத்து தகராறில் வாலிபருக்கு கொலைமிரட்டல் அண்ணன் உள்பட 2 பேர் கைது;
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே உள்ள மாதவராயன்பட்டியை சேர்ந்த முத்தையா என்பவருடைய மகன் தியாகராஜன் (வயது 38). இவருக்கும் இவருடைய அண்ணன் அபிமன்யுவுக்கும் சொத்து தகராறு இருந்துவந்தது. இதுதொடர்பாக தியாகராஜனை அவருடைய அண்ணன் அபிமன்யு, இவருடைய மனைவி இந்திராணி மற்றும் சிலர் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குபதிந்து அபிமன்யு, இந்திராணியை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.