நெல்லை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகள் தொடங்கப்படும் ரெயில்வே மேலாளர் பேட்டி

மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் நெல்லை-நாகர்கோவில் இரட்டை ரெயில்பாதை திட்ட பணிகள் தொடங்கப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இத்ரேயா கூறினார்.

Update: 2017-08-22 23:00 GMT
நெல்லை,

தெற்கு ரெயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் நீனு இத்ரேயா இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று பகல் 12.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தார். அவரை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் சிவசங்கரநாராயணன் வரவேற்றார்.

பின்னர் அவர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தார். நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் சரியாக வருகிறதா? ரெயில் பெட்டிகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

மேலும் நகரும் படிக்கட்டுகள் சரியாக வேலை செய்கிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ரெயில் நிலையத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தேன்.

நெல்லை-நாகர்கோவில், நெல்லை- மதுரை இடையே இரட்டை ரெயில்பாதை திட்ட பணிகள் மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் கிடைத்தவுடன் தொடங்கும்.

செங்கோட்டை-புனலூர் ரெயில் பாதை பணிகள் கட்டுமான பிரிவில் தகவல் கேட்ட பிறகு தான் தெரிவிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்