வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2017-10-09 22:45 GMT
திருவாரூர்,

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம், திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணி அந்தந்த வாக்குச்சாவடிகளில் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் வருகிற 22-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், நிர்வாகிகள் முத்துமாணிக்கம், விஜயராகவன், ரயில்பாஸ்கர், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

இதேபோல மன்னார்குடி நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம், நகர செயலாளர் மாதவன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூரில் உள்ள மரக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர்அகமது, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅஸ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர அவைத்தலைவர் அப்பாதுரை, நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, நகராட்சி தேர்தல் உதவியாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்