வனப்பகுதியில் மணல் கடத்தியவர் கைது ரூ.1 லட்சம் அபராதம்

வாணாபுரம் அருகே வனப்பகுதியில் மணல் கடத்தியவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2017-11-12 23:00 GMT
வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்ட வனப்பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்தி உத்தரவின் பேரில் வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனவர் சீனிவாசன், வனகாப்பாளர்கள் சேகர், ராஜாராம், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாவட்ட வன பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது வாணாபுரம் அருகில் ஆயன்மலை கோவில் பின்புறம் உள்ள கசிவுநீர் குட்டையில் ஆட்களை வைத்து மினிவேனில் மணல் கடத்தி கொண்டிருந்த மேல்கச்சிராப்பட்டு காந்திபுரம் பகுதியை சேர்ந்த பஞ்சமூர்த்தி (வயது 36) என்பவரை வனத்துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது. மணல் கடத்திய பஞ்சமூர்த்திக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்