விமானம் மூலம் 10½ கிலோ தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் 10½ கிலோ தங்கம் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-13 22:05 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி டொமொஸ்லாஸ்கி பவெல் என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அவர் இடுப்பில் அணிந்திருந்த துணியினால் ஆன ‘பெல்ட்’ பாக்கெட்டில், 7 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், ஈரான் நாட்டில் இருந்து வந்த மனோச்சர் சபி என்பவர், கடத்தி வந்த 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவரும் கைதானார். ரியாத்தில் இருந்து 1½ கிலோ தங்கம் கடத்தி வந்த பப்புசிங் என்பவரும் சிக்கினார்.

மேற்படி, 3 பேரிடம் இருந்து ஒரே நாளில் 10½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 84 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்