செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் வைகோ பேட்டி

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

Update: 2017-11-29 21:00 GMT

கோவில்பட்டி,

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

நியாயமான கோரிக்கைகளை...

சென்னையில் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது குறித்து வருகிற 3–ந்தேதி சென்னை தாயகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனாலும் விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

நஷ்டம்

விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனாலும் பல இடங்களில் போதுமான அளவு மழை பெய்யாததால், விவசாயிகள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகின்றனர். நாங்கள் பல தோல்விகள், இழப்புகளை சந்தித்தாலும், நேர்மையுடனும், கட்டுப்பாட்டுடனும், எழுச்சியுடனும் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி), தி.மு.ராஜேந்திரன் (நெல்லை), மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் பவுன் மாரியப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்