விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-11-29 22:15 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாநில செயலாளர்கள் ராஜூ, பரந்தாமன், மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மாவட்ட மாறுதல் உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டும், உட்பிரிவு, நகராட்சி பட்டா மாறுதல் உரிமைகளை பறிக்கக்கூடாது, கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையின்றி பட்டாக்கள் வழங்கக்கூடாது, கூடுதல் கிராம பொறுப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் உமாபதி, உத்திரவேல், ஹேமச்சந்திரன், முத்துக்குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் கமலநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்