காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பட்டை நாமத்துடன் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பட்டை நாமத்துடன் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-29 23:00 GMT
திருவாரூர்,

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சவுந்தர ராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அப்பாசாமி முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசி னார். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். அலுவலக ஊழியர்களுக்கு இணையான ரூ.15 ஆயிரத்து 700 கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும்.

பதவி உயர்வு பட்டியலை உடன் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் நெற்றியில் பட்டை நாமத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் காசிநாதன், நிர்வாகிகள் சுதாகர், சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்