‘நாசா’ உருவாக்கியுள்ள புதுமை டயர்

புதிய தொழில்நுட்பத்திலான டயர்களை உருவாக்கும் முயற்சியில் ‘நாசா’ இறங்கியுள்ளது.

Update: 2017-12-16 10:00 GMT
ந்த வகையான நிலப்பரப்பிலும் தாக்குப்பிடிக்கக்கூடிய புதுமையான டயரை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ உருவாக்கியிருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படும் விண்கலங்கள் வேற்றுக்கிரகங்களின் கரடுமுரடான மேற்பரப்பில் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதன் காரணமாக, விண்கலங்களின் சக்கரங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அத்துடன், அம்மாதிரியான டயர்களின் உதவியுடன் விண்கலங்களை இடம் விட்டு இடம் நகர்த்துவதும் கடினமாக உள்ளது.

இப்பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு, புதிய தொழில்நுட்பத்திலான டயர்களை உருவாக்கும் முயற்சியில் ‘நாசா’ இறங்கியது.

தற்போது இந்த முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது சங்கிலி வடிவில் வலிமையான கம்பிகளை இணைத்து டயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை தற்போதைய டயர்களை காட்டிலும் 30 மடங்கு அதிகமாக மோசமான நிலையைத் தாங்கக்கூடியவை என நாசா வட்டாரங்கள் கூறுகின்றன.

எதிர்காலத்தில், சாதாரண வாகனங்களிலும் இதுபோன்ற டயர்கள் இடம்பெற்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! 

மேலும் செய்திகள்