மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்: மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட பேராசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்

மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட பேராசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் துணைவேந்தர் பாஸ்கர் பேசினார்.

Update: 2018-01-18 21:15 GMT
பேட்டை,

மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட பேராசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் துணைவேந்தர் பாஸ்கர் பேசினார்.

கருத்தரங்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ‘மாணவர்களின் முன்னேற்றத்துக்கு ஆசிரியர்களின் பங்கு‘ என்ற தலைப்பில் பல்கலைக்கழக செனட் அரங்கில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. தொலைநெறி கல்வியியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் கல்வியியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்றார். கருத்தரங்கம் குறித்து பேராசிரியர் தீபா பேசினார்.

துணைவேந்தர்

பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

பேராசிரியர், மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். ஆராய்ச்சி தொடர்பாக மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு நல்ல கற்றல், கற்பித்தல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

ஆசிரியர்- மாணவர் இடையே தகவல் தொடர்பு திறன் நன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும். மாணவர்களின் மனப்பான்மை, ஆளுமை திறன், ஆர்வம், பொழுதுபோக்கு ஆகியவற்றை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு துணைவேந்தர் பாஸ்கர் பேசினார்.

நிகழ்ச்சியில் தேசிய அளவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ரெக்ஸிலின் ஜோஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்