பாலிடெக்னிக் படிப்பு: தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு

என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெறாமல் தவறவிட்டவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு ஒன்றை தொழில்நுட்ப கல்வித் துறை அறிவித்துள்ளது.

Update: 2018-01-22 07:56 GMT
பாலிடெக்னிக் எனப்படும் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்புகள், தொழில்நுட்பத்துறையில் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் படிப்பாக உள்ளது. இருப்பினும் ஏராளமான மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாமல் படிப்பை நிறைவு செய்திருக்கலாம். தொடர்ந்து அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறாமல் தவறவிட்டவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு ஒன்றை சமீபத்தில் தொழில்நுட்ப கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு பட்டயத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க சரியான தருணம் இதுவாகும். விருப்பம் உள்ளவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். அத்துடன் பட்டியல் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணமாக ரூ.55 சேர்த்து செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7-ந் தேதி கடைசிநாளாகும். அதன்பின்னர் அபராதத் தொகை செலுத்தி பிப்ரவரி 14 வரை விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகும் தட்கல் முறையில் கூடுதல் அபராதம் செலுத்தி மார்ச் 9-ந்தேதி வரை விண்ணப்பிக்க முடியும். இது பற்றிய விவரங்களை tndte.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்