ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வைரமுத்து தயங்குவது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வைரமுத்து தயங்குவது ஏன்? என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2018-01-22 23:15 GMT
கோவை,

பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்று பா.ஜனதா கேட்டு வருகிறது. படிப்படியாக கட்ட ணத்தை உயர்த்தி இருந்தால் மக்களுக்கு சிரமம் இருக்காது. அ.தி.மு.க. கடந்த 6 ஆண்டாக பஸ் கட்ட ணத்தை உயர்த்தவில்லை. போக்குவரத்து கழக நன்மைக்காக உயர்த்தி உள்ளோம் என்று கூறி அரசு மோசடி செய்து வருகிறது.

தற்போது எந்த தேர்தலும் வரவில்லை என்பதால் தங்களுடைய சுயநலத்துக்காக உயர்த்தி உள்ளனர். பஸ் கட்டண உயர்வு தொடர்பாக பா.ஜனதாவில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. கட்டணத்தை அதிகப்படுத்தி மக்கள் தலையில் சுமத்தி உள்ளனர் என்பதே பா.ஜனதாவின் நிலைப்பாடு ஆகும். பஸ் கட்டணத்தை உயர்த்தியதை சரி என்று நான் கூற வில்லை. ஆனால் நான் கூறியதை சிலர் தவறாக புரிந்து கொண்டனர்.

தமிழை வளர்த்த 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறு தான். ஆனால் அவர் இதுவரை மன்னிப்பு கேட்க வில்லை. வருத்தம் தான் தெரிவித்து உள்ளார். வருத்தம் வேறு, மன்னிப்பு வேறு. ஆண்டாள் குறித்து அவர் பேசியது அனைவரின் மனதையும் புண் படுத்தி உள்ளது. அவரை அரசியல்வாதிகளிடமோ அல்லது இந்து அமைப்புகளின் தலைவர்களிடமோ மன்னிப்பு கேட்க கூறவில்லை. ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கதான் கூறுகிறார்கள்.

ஆனால் அவர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க தயங்குவது ஏன்?. எனவே அவர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது இது போன்று ஏற்பட்ட பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு முடித்து வைத்தார். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பிரச்சி னையில் மவுனம் சாதித்து வருகிறார். எனவே தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு எவ்விதத்திலும் காலம் தாழ்த்த வில்லை. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவை கொடுக்கிறது. இந்த திட்டம் நிறைவேறினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள். தற்போது ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், ஏற்கனவே ஆட்சி செய்த தி.மு.க.வும் இந்த திட்டத்தை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் தமிழகத்துக்கு எந்த ஒரு பயனும் இல்லை. எனவே தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தில் ஆட்சியை கைப்பற் றுவதே பா.ஜனதாவின் குறிக்கோள் ஆகும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று அதிக இடங்களை கைப்பற்றும். அதுபோன்று சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றும். அதற்கான திட்டங்களை தான் நாங்கள் இப்போது செயல்படுத்தி வருகிறோம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்படும் போது பெட்ரோல்-டீசல் விலை உயர்த் தப்படுகிறது. இதன் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர திட்டம் உள்ளதாக பெட்ரோலியத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார். நமது நாட்டில் தனியார் விமான கட்டணம், ஆம்னி பஸ்கள் கட்டணம் அதிகளவில் உயர்ந்து வருகிறது. அதை தடுக்க யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்