பயனுள்ள தானியங்கி கதவு

ஜெர்மனைச் சேர்ந்த பொறியாளர்கள் புதுமைக் கதவு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.

Update: 2018-02-20 10:14 GMT
ண்ணாடிக் கதவுகளுக்கு மாற்றான அழகுடன், வெப்பத்தை உறிஞ்சும் திறனுடன் புதுமைக் கதவு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த பொறியாளர்கள் இந்த புதுமைக் கதவை உருவாக்கி இருக்கிறார்கள்.

திரைச்சீலை, நிழல் அமைப்பு எதுவுமின்றியே ஒளி ஊடுருவுவதை தடுக்கிறது இந்தக் கதவு. இரண்டு அடுக்கு கண்ணாடிக்கு இடையே, இரும்பு நானோதுகள்களும், திரவமும் நிரப்பப்பட்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்காந்த நுட்பத்தில் நானோ துகள்கள், திரவத்தில் குறிப்பிட்ட இடத்தில் இடை நிறுத்தப்பட்டு உள்ளன.

சூரிய வெளிச்சத்தை தடுத்துநிறுத்திவிடுவதுடன், சூரிய ஒளியில் இருந்து வெப்ப ஆற்றலை கிரகித்துக் கொள்ளக் கூடியது இந்தக் கதவு. நானோ துகள்களை கட்டளை கொடுத்து இடம் மாற்றி அமைக்க முடியும் என்பதால் தேவையான அளவுக்கு இயற்கை ஒளியை உள்ளே அனுமதிக்கலாம். அதன் நிழல்தன்மையை அதிகரித்து ஒளியைத் தடுத்து குளிர்ச்சியை அதிகரிக்கவும் முடியும்.

கதவின் இந்தப் பணிகளைச் செய்வதற்காக மின் இணைப்பு எதுவும் வழங்க வேண்டியதில்லை. கதவால் கிரகிக்கப்படும் சூரிய வெப்ப ஆற்றலை தனக்கான தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறது. கூடுதல் ஆற்றலை பல்வேறு தேவைகளுக்கு மாற்றிப் பயன்படுத்தலாம். இந்த ஆண்டின் பின்பாதியில் இந்த கதவுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்