வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் எய்தும் பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் எய்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-03-09 21:00 GMT
தூத்துக்குடி,

திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் எய்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

இலவச பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் வகையில் இலவச திறன் எய்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 1.4.2018 முதல் தொடங்க உள்ளது.

அரசாணையின்படி இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 85 சதவீதம் வருகை புரிந்து இருந்தால், போக்குவரத்து செலவு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் பயிற்சியின் முடிவில் வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பம்

இதற்கான விண்ணப்பம் வருகிற 23–ந்தேதி வரை திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள் ஆவர். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பயிற்சி காலம் 120 மணி நேரம் ஆகும்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்