பாயும் பெண் புலிகள்

டெல்லி காவல்துறை சார்பில் ரோந்து பணியில் ஈடுபட பெண் போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது.

Update: 2018-03-18 09:45 GMT
டெல்லியின் தெற்கு பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் பெண் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், பூங்காக்கள், கல்லூரிகள் போன்ற பகுதிகளில் பெண்கள் சவுகரியமாக நடமாடுவதற்கு ஏற்ப பாதுகாப்பு கொடுக்கும் நடவடிக்கையாக இவர்களின் ரோந்து பணி அமைந்திருக்கிறது. இந்த பெண் போலீசாருக்கு வயர்லெஸ் கருவிகள், ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆயுதங்களை கையாளும் பயிற்சியோடு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீசாரை களப்பணியில் ஈடுபடுத்தும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது. அவர்கள் எந்நேரமும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பெண்கள் தைரியமாக சாலைகளில் நடமாடும் சூழ்நிலை உருவாகும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். மேலும் பெண் போலீசாரின் ரோந்து பணி மூலம் தெற்கு டெல்லியில் சமூக விரோத செயல்கள் கட்டுக்குள் வரும் என்றும், பெண்கள் அதிக எண்ணிக்கையில் போலீசில் சேர ஆர்வம் காட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்