ஜிப்மர் மருத்துவமனையில் நர்சிங் அதிகாரி வேலை

ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ஜிப்மர் என்று அழைக்கப்படுகிறது.

Update: 2018-04-24 05:24 GMT
புதுச்சேரியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் தற்போது நர்சிங் ஆபீசர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் (குரூப்-சி) பணியிடங் களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் நர்சிங் ஆபீசர் பணிக்கு மட்டும் 91 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

நர்சிங் ஆபீசர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18-5-2018 இதழில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் ஜெனரல் நர்சிங் அண்ட் மிட் வைபரி பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்து நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்தவர்களாக இருக்க வேண்டும்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கணினித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டியது குறிப்பிடத்தக்கது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1200 செலுத்த வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 18.5.2018-ந் தேதி. இதுபற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளள www.jipmer.puducherry.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்