கரூர் பஸ் நிலையத்தில் குடிபோதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

கரூர் பஸ் நிலையத்தில் குடிபோதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2018-05-10 22:34 GMT
கரூர்,

கரூர் பஸ் நிலையத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சிகரம் குடிபோதை மறு வாழ்வு மையம் ஆகியவை இணைந்து நடத்திய குடிபோதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமுதாயத்தில் தவறான பழக்கமான குடிபோதைக்கு அடிமையாகி சிக்கி தவிப் பவர்களை மீட்கவும், அவர் களுக்கு மறு வாழ்வு அளிக்கவும் அது தொடர்பாக வழிகாட்டவும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, சமூக பாதுகாப்புத்துறை மற்றும் தாந்தோணியில் அமைந்துள்ள சிகரம் குடிபோதை மறு வாழ்வு மையம் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர்.

சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்

மேலும் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து அதன் மூலம் 257056 என்ற எண்ணில் குழந்தை பாதுகாப்பு அலுவலகத்திற்கோ அல்லது 9382232323 என்ற எண்ணில் சிகரம் மறுவாழ்வு மையத்திற்கோ தொடர்பு கொண்டு ஆலோசனைகள் மற்றும் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதேபோல் வருகிற 15, 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் குளித்தலை பஸ் நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் இந்த விழிப்புணர்வு பிரசார செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கவிதா, வட்டாட்சியர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்