சாதாரண மின்சார ரெயில்களில் இணைப்பதற்காக 250 ஏ.சி. பெட்டிகளை வாங்க ரெயில்வே முடிவு

சாதாரண மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்கும் திட்டத்திற்காக 250 ஏ.சி. பெட்டிகளை வாங்குவதற்கு ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

Update: 2018-05-10 22:45 GMT
மும்பை, 

சாதாரண மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்கும் திட்டத்திற்காக 250 ஏ.சி. பெட்டிகளை வாங்குவதற்கு ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஏ.சி. ரெயில் சேவை

மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரெயில் தினமும் விரார், போரிவிலி - சர்ச்கேட் இடையே தினமும் 12 சேவைகள் இயக்கப்படுகிறது. எனினும் இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.

கடந்த 4 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்து உள்ளனர்.

சாதாரண ரெயிலில் ஏ.சி. பெட்டி

இந்தநிலையில் சாதாரண மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை சேர்க்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி கூறும்போது:-

12 பெட்டிகளை கொண்ட சாதாரண மின்சார ரெயில்களில் 4 அல்லது 6 ஏ.சி. பெட்டிகளை இணைப்பது குறித்து யோசித்து வருகிறோம். 6 பெட்டிகளை இணைப்பதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாக ரெயில்களை எளிதில் இயக்க முடியும். இந்த திட்டத்திற்காக சுமார் 250 ஏ.சி. ரெயில் பெட்டிகள் வாங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்