ரூ.2¼ லட்சம் கலப்பட சமையல் எண்ணெய் பறிமுதல் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிரடி

ரூ.2¼ லட்சம் மதிப்பிலான கலப்பட சமையல் எண்ணெயை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Update: 2018-05-12 22:30 GMT
மும்பை, 

ரூ.2¼ லட்சம் மதிப்பிலான கலப்பட சமையல் எண்ணெயை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

கலப்பட சமையல் எண்ணெய்

மும்பை சாக்கிநாக்காவில் சமையல் எண்ணெய் வியாபாரம் செய்து வருபவர் நிதின் பன்சாலி. இவர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாப்பாட்டு கடைகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அவற்றை தூய்மையான எண்ணெயுடன் கலப்படம் செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இது தவிர தவிட்டு எண்ணெயையும் சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். இதை அறிந்திராத பொதுமக்களும் மலிவு விலையில் கிடைத்ததால் இவரிடம் எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

பறிமுதல்

இந்தநிலையில் நிதின் பன்சாலியிடம் வாங்கிச் செல்லும் சமையல் எண்ணெயில் இருந்து வித்தியாசமான நாற்றம் வருவதாகவும், அவற்றை சாப்பிடும்போது தொண்டையில் எரிச்சல் ஏற்படுவதாகவும் மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாக துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று நிதின் பன்சாலியின் எண்ணெய் கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 3 ஆயிரத்து 566 கிலோ கலப்பட சமையல் எண்ணெய் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த கலப்பட எண்ணெயை பறிமுதல் செய்த அதிகாரிகள், நிதின் பன்சாலியை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்