எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 240 பணியிடங்கள்

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 240 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2018-05-15 06:17 GMT
கில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது புவனேஸ்வர் நகரில் செயல்படும் எய்ம்ஸ் கிளையில் சீனியர் ரெசிடன்ட், கூடுதல் பொது மேலாளர் போன்ற பணிக்கு 150 பேரும், புதுடெல்லி கிளையில் சயின்டிஸ்ட், டியூட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு 90 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங் களைப் பார்ப்போம்...

புவனேஸ்வர் 150 பணிகள்

புவனேஸ்வரில் உள்ள 150 பணியிடங்களில், சீனியர் ரெசிடன்ட் பணிக்கு மட்டும் 148 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சீனியர் ரெசிடன்ட் பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்களும், கூடுதல் பொது மேலாளர் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எம்.டி., எம்.எஸ்., டி.எம்., டி.என்.பி., எம்.எச்.ஏ., எம்.சி.எச். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500-ம், பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 1000-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப காலம் 7-5-2018 அன்று தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய விவரங்களை http://aiimsbhuban eswar.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆராய்ச்சியாளர் பணிகள்

புதுடெல்லி எய்ம்ஸ் கிளையில் சீனியர் பயோ கெமிஸ்ட், பிளட் டிராபியூசன் ஆபீசர், சயின்டிஸ்ட், அசிஸ்டன்ட் பிளட் டிராபியூசன் ஆபீசர், டியூட்டர், கிளினிகல் சைகாலஜிஸ்ட், அசிஸ்டன்ட் அட்மின் ஆபீசர், டிரான்ஸ்பிளாண்ட் கோஆர்டினேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எஸ்சி. நர்சிங், எம்.எஸ்சி., மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை மருத்துவ படிப்புடன் பிஎச்.டி. படித்தவர்கள், டிப்ளமோ சிவில் படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. வயது வரம்பு 18-6-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18-6-2018 ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை https://www.aiims.edu/en.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்